Wednesday, January 19, 2011

சிட்டு குருவிகள் , காணாமல் போன கதை !!!


வணக்கம் மானுட நண்பர்களே !!!

என் பெயர் சிட்டு குருவி ...


( பி .கு சிட்டுக் குருவிகள் , எங்கும் கிடைக்கததால் கிளியின் படங்கள் :) )

காடுகளிலும் , கழனிகளிலும் , கரன்ட் கம்பங்களிலும் 
                 என்னை நீங்கள் பார்த்திருப்பீர்கள் !!!

காக்கை , குருவி எங்கள் ஜாதி - என்று 
                 எமைப் பற்றி உவகையாய்  பாடியுள்ளான் , புரட்சிக்கவி !!!

" சிட்டு குருவி முத்தம் கொடுத்து ..." - என்று 
                 எனைப்பற்றி பாடி அன்பு வளர்த்தார்கள் !!!

"ஏய் குருவி , சிட்டுக்குருவி ...."  - என்று
                  நடிகர் திலகமும் கூவி மகிழ்ந்தார் .

இப்படி ஏற்றமும் , போற்றமுமாக சுதந்திரமாய் ,
                 சிறகடித்து வானில் பறந்திருந்தேன் !!!

பொல்லாத மானிடர் பலர் , நித்தமும் 
                (வெட்டி ) பொல்லாப்புக் கதைகள் பேச 


ஊரெல்லாம் வெட்டி எறிந்தார்கள் மரங்களை !!!
மனிதப் பதர்கள் , நட்டார்கள் செல்போன் டவர்களை !!!

அழித்தேவிட்டனர், வேரோடு எங்களை !!!

BLUE CROSS புதல்வர்களே !!!
         என் இனத்தை , எனக்கு கண்டுபிடித்து தாருங்களேன் , ப்ளீஸ் ?!!!




Tuesday, January 11, 2011

தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!!


அனைவருக்கும் இனிய பொங்கல் (தமிழ்  புத்தாண்டு ?) நல் வாழ்த்துக்கள் .



பொங்கல் - தமிழ் புத்தாண்டா? இந்த அரசியல்வாதிகள் , மக்களை ரொம்பவே குழப்பிட்டாங்க .. எது புத்தாண்டு? எப்படி வாழ்த்து சொல்றதுன்னே தெரியல.. 

எல்லாருக்கும் பொதுவா , தமிழர் திருநாள் ( உழவர் ) வாழ்த்துக்கள் .
அலுவலக நண்பர் ( தமிழர் தான் ) பொங்கலுக்காக , சொந்த ஊருக்கு செல்கையில், "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் " என்று சொன்னேன்..
அவரோ புருவம் உயர்த்தி , " என்ன tamil ல wish பண்றீங்க? " என்று அதிர்ச்சியாக கேட்கிறார் ... 

தமிழர் திருநாளுக்கு, தமிழில் வாழ்த்து சொல்வது கூட ஆச்சர்யமாகிவிட்டது .

Friday, December 24, 2010

வாழ்க நற்றமிழ் !!! வாழிய செந்தமிழ் நாடு !!!


உலக தமிழர்களின் தலைவர் என்று ஒருவர் இருக்கிறார் ...


பழங்காலமாய் 'தமிழ்' பேசியே தமிழ் மக்களை மடையர்கள் ஆக்கிகொண்டிருக்கும் , சித்து வேலைகள் நன்று தெரிந்தவர் இவர் ...









ஈழத்தின் கூக்குரல்கள் இவருக்கு எப்பவும் 'தூரத்து இடி முழக்கம்' தான். 

மெரீனாவில் உண்ணாவிரத நாடகமும், நடுவண் அரசுக்கு சளைக்காமல் 'பதில் வாரா' கடிதங்களும் மட்டுமே அனுப்பிக் கொண்டிருப்பார்..

ஈழத்தின் ஓலம் இருக்கட்டும், சிங்கள அரசின் துப்பாக்கிகளுக்கு நித்தமும் இரையாகும் , எம் தாய் தமிழக  'மீனவர்களின்'     கூக்குரல்கள் கூடவா இவருக்கு கேட்காது ?

ஆம் எப்படி கேட்கும் ? மந்திரி சபையை பங்கு போட, தலைநகர் வரை சென்று பந்தி அமர்ந்து வரவும், 

லட்சம் கோடி ஊழல்களில் தமக்கு பங்கே இல்லை என்ற "நமத்து" போன பேட்டிகள் கொடுக்கவும்,    

பாராட்டு விழாக்கள்  பலவும் கண்டு களைத்துப்போய் இருப்பார். 

தலைவருக்கு  மிஞ்சிய 'தனயன்கள்' தமிழகத்தை கூறு போட்டு , குடும்பமே சொந்தம் கொண்டாடி வருகிறது ... 

திருமங்கலம் பார்முலா இருக்கும் வரை எங்களை அசைக்க முடியாது என மார் தட்டுகின்றனர்  ..

இடித்துரைக்க வேண்டிய எதிர்க்கூடாரமோ  'கொட நாட்டிலேயே' தூங்கிக் கொண்டிருக்கிறது .

தட்டிக் கேட்கவேண்டிய ஊடகங்களோ , போட்டி போட்டுக் கொண்டு ஆளும்கட்சி 'ஜால்ரா'  போட்டுக் கொண்டிருக்கிறது ...

அரசியல் கட்சிகள் அனைத்தும்  , எஞ்சியதை பிய்துண்பதற்காக "தேர்தல்" திருவிழாவை எதிர் நோக்கி காத்திருக்கின்றன ...

 தமிழன் பாவம்.... யாரைத்தான் நம்புவான் ? என்ன தான் செய்வான்? 


  • இலவச தொலைகாட்சி, 
  • இலவச சமையல் எரிவாயு, 
  • இலவச மின்சாரம், 
  • கடன்கள் தள்ளுபடி , 
  • வேலை இல்லாமல் இருப்பதற்கே ஊக்கதொகை (?!) 


என இலவசங்களிலேயே வாழ்வதால் , நீண்ட காலமாய் உழைப்பையே மறந்து விட்டான் .     

எது எப்படி இருந்தால் நமக்கு என்ன? 

மன்மதன் அம்பு ' எப்போ ரிலீஸ் ஆகும்?  
எந்திரன்   கலக்சன் எவ்வளவு? 

என்று  கதைகள் பேசி ....

டீலா நோ டீலா ? நீயா நானா ? பார்த்து விட்டு தூங்கி இருப்பதே சுகம் ...

வாழ்க நற்றமிழ் !!!   வாழிய செந்தமிழ் நாடு !!!

(கருத்து பிழைகளை , மன்னிக்கவும் ... )

கவிஞர் வாலியின் அமரத்துவம்


சில நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில்  ஒரு நிகழ்ச்சியில், கவிஞர் வாலி அவர்களின் பாடல்களை பற்றி சிலாகித்து கொண்டிருந்தனர். அவற்றில் ஒரு பாடல் என் மனதில் ரீங்கரித்து கொண்டே இருக்கின்றது ..


 


உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது , 
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது .....
காதல் தோற்றதாய் கதைகள் இங்கு ஏது ?
தோற்றால் தோற்றது காதல் ஆகாது .... 
எல்லாமே சந்தர்ப்பம் கற்பிக்கும் தப்பர்த்தம்....



அற்புதமான வரிகள்...   காதலர்கள் தோற்கலாம் , காதல் தோற்பதில்லை .
                           


Sunday, November 30, 2008

சென்னை தத்தளிப்பு



மழை யின் கோர தாண்டவம் .........

நூறு உயிர்களை பலி வாங்கிய பின்பும் அடங்காமல் மக்களை வாட்டி வதைத்து வருகிறது..
ஆயிர கணக்கானோர் வீடிழந்து தவித்து வருகின்றனர் ....

இயற்கையின் சீற்றம் குறையவும் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவும் வேண்டிகொள்வோம்..


மும்பை TERROR ATTACK




இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராட்டம் ......................

இந்தியாவும் இந்தியா மக்களும் எதிர்கொள்ளும் இரண்டவது சுதந்திர போராட்டம் இது..
தீவிரவாதத்துக்கு எதிரான இந்த போராட்டத்தில் நம் இந்திய மக்கள் அனைவரும் ஒன்று பட்டு வேற்றுமைகளை மறந்து போராட வேண்டும்..
உலக அளவில் தீவிரவாதத்தால் பாதிக்க பட்ட அனைத்து நாடுகளும் ஒன்றிணைத்து இதை வேரோடு அழிக்க வேண்டும்


எதிர்கால இந்திய வல்லரசு எதிர்கொள்ளபோகும் ஒரே எதிரி தீவிரவாதம்...

ஒன்றுபடுவோம் இந்தியாவை காப்போம்...

ஜெய் ஹிந்த்..

www.mercurynewsphoto.com/2008/11/mumbaishooting/

Saturday, November 22, 2008

வருக !! வருக !!


என் இனிய நண்பர்களே !

உங்களை என் வலை தளத்திற்கு , வரவேற்கிறேன் .