Tuesday, January 11, 2011

தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!!


அனைவருக்கும் இனிய பொங்கல் (தமிழ்  புத்தாண்டு ?) நல் வாழ்த்துக்கள் .



பொங்கல் - தமிழ் புத்தாண்டா? இந்த அரசியல்வாதிகள் , மக்களை ரொம்பவே குழப்பிட்டாங்க .. எது புத்தாண்டு? எப்படி வாழ்த்து சொல்றதுன்னே தெரியல.. 

எல்லாருக்கும் பொதுவா , தமிழர் திருநாள் ( உழவர் ) வாழ்த்துக்கள் .
அலுவலக நண்பர் ( தமிழர் தான் ) பொங்கலுக்காக , சொந்த ஊருக்கு செல்கையில், "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் " என்று சொன்னேன்..
அவரோ புருவம் உயர்த்தி , " என்ன tamil ல wish பண்றீங்க? " என்று அதிர்ச்சியாக கேட்கிறார் ... 

தமிழர் திருநாளுக்கு, தமிழில் வாழ்த்து சொல்வது கூட ஆச்சர்யமாகிவிட்டது .



வலை உலக நண்பர்கள் அனைவரின் கவனத்திற்கும்

உழவனை பட்டினி போட்டு , TV யில் சினிமாகாரனின் , பேட்டியை பார்த்துகொண்டு   "HAPPY PONGAL" கொண்டாடினால் , நாளைய தமிழர்க்கு உன்ன உணவிருக்காது ( பீட்சாவும் , பர்கரும் தான் கதி ) உழுவதற்கும் நிலமிருக்காது (ரியல் எஸ்டேட் உபயம்).


அரசாங்கமே ,உழவுக்கு வந்தனை செய்யாவிட்டாலும் பரவாயில்லை , ஏழை உழவர்களின் வயிற்றில் அடித்து அவர்களை வதை செய்யாதீர்கள் ...

No comments:

Post a Comment