Friday, January 28, 2011

இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப்போராட்டம் !!!




நாட்டுப் பற்றுள்ள அனைத்து தமிழருக்கும் (இந்தியருக்கும்) , 
என்னுடைய பணிவான வேண்டுகோள் .

போபர்ஸ், ஹவாலா, ஸ்பெக்டரம, காமன்வெல்த் போட்டி ஊழல்,  ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் , சுடுகாட்டு கூரை ஊழல் , மாட்டுத் தீவன ஊழல்,  22.5 லட்சம் கோடி சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கல் ( எத்தனை சைபர் என்று சத்தியமா தெரியல ..) 
    
போதும் டா சாமி , அரசியல்வாதிகளை நம்பி நம்பி 
கட்டியிருக்கும் கோவணம் கூட மிஞ்சாது போல ..

பொறுமைசாலி இந்தியர்களே , இத்தனை ஊழல்களுக்கும , 
நீங்கள் மௌனம் சாதித்து , மங்குணிகளாக இருந்தது போதும் .


நமது  தாய் நாட்டை , ஊழலில் திளைத்த அரசியல்வாதிகளிடமிருந்து 
மீட்டு எடுக்கவேண்டியது நமது கடமை .


மக்கள் அனைவரும் ஊழலுக்கு எதிராக ஒன்றிணைவோம் .
காசுக்கு ஒட்டு வேண்டவே வேண்டாம் ..

லஞ்சம் கொடுக்க வேண்டாம் , லஞ்சம் வாங்கவும் வேண்டாம் .
சுய மரியாதையுடன் , நெஞ்சு நிமிர்த்தி வாழ்வோம் .

ஊழலுக்கு எதிரான இரண்டாவது சுதந்திர வேள்வி செய்வோம் .
ஜாக்கிரதை , காந்தி போல , வீரபாண்டிய கட்டபொம்மனைப் போல 
முமமூடியிட்டு  இன்று கோட்சேக்களும் , எட்டப்பன்களுமே நிறைந்திருக்கிறார்கள். 

தன்மானமுள்ள, இந்தியர்கள் யாவரும் 
ஜாதி , மத , இன , மொழி அனைத்து வேலிகளையும் தாண்டி ஒன்றுபடுவோம் .



ஊழலுக்கு எதிரான மாபெரும் மனித சங்கிலி போராட்டம் !!!

வழிநடத்துபவர்கள் : http://www.indiaagainstcorruption.org/   அமைப்பினர் .

இடம் : காந்தி சிலை , மெரினா கடற்கரை , சென்னை .
நாள் : 30 ஜனவரி , 2011. ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9:00 முதல் 11:00 வரை .

மேலும் விவரங்களுக்கு :
http://www.facebook.com/event.php?eid=137372249656901&ref=mf

நமது வருங்கால சந்ததியினருக்காக , ஊழலற்ற இந்தியாவை விட்டுச்செல்லுவோம் ,
அனைவரும் வாருங்கள் !!!




Saturday, January 22, 2011

மேனேஜரிடம் கேட்க விரும்பும் கேள்விகள்....


1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க... ஆனா சாயந்திரம் 6 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது...? 

 
2.  
அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சப்படாம சொல்லிட்டு போக முடியுது..? 




3. 
 
நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicated னு சொல்றீங்க... ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumb  னு சொல்றீங்க..? 


4. உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலைனா,அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க... அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க..? 

5. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க...? 

6. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on work னு சொல்றீங்க...? 

7. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க...? 

8. சாயந்திரம் 6 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க...? 

ஏன் சார் ஏன்....


( அது ஒன்னும் இல்லீங்க , ஆபிஸ்ல மேனேஜர் கூட லடாய்
 அதுதான் இப்படி ....)

Friday, January 21, 2011

(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?



1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code) திறந்துவைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல  
அதையே பார்த்துக் கொண்டிருங்கள்.
பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

 2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும்அவ்வப்போது 
 பற்களைக் கடித்துக் கொள்ளவும்ஏதாவதுரெண்டு வார்த்தை
  டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.

3. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும்.
 கூடவே நகத்தையும் கடித்துவையுங்கள்.






4. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில  
நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்துடைப் அடிக்கவும்.

5. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள்.
 நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள் 
கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்துசிரித்தபடியே 
 "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்என்றோ சொல்லுங்கள்.

6. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள் 
ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள்  
என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

7. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு  
நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் திறந்தேவையுங்கள் 
அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும்நம்பர்களையும்  
கிறுக்கிக் கொண்டிருங்கள்.


8. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை  
எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் முக்கியமானமீட்டிங்குக்கோ 
விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.

9. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய் 
ஹலோவுக்கு பதில் சொல்லாமல்கடந்து செல்லுங்கள்,
 பிறகு பிஸியாக இருந்தேன்ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.

                                                   
10. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால்  
(உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்உங்கள்  
டீம்மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள்.  
போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம்போட்டு விட்டு வாருங்கள்.

Thursday, January 20, 2011

நான் ஏன் பதிவு எழுத வேண்டும் - ஒரு தன்னிலை விளக்கம்


பதிவுகள் எனக்கு அறிமுகமாகி 3 வருடங்கள் ஆகிவிட்டது , ஆனால்

உருப்படியாக நான் எதையுமே எழுதியதில்லை .


நான் ஏன் எழுதவேண்டும் என்று எனக்கே பல நேரங்களில் தோன்றுவதுண்டு , ஆனாலும் மனசுக்குள்ளே எழுதவேண்டும் என்ற உந்துதலும் , ஆர்வமும் எனக்கு எப்பவுமே இருந்துவருகின்றது . அந்த ஆர்வத்தால ( ஆர்வக்கோளாறு ? ) அப்பப்போ பதிவுகள் எழுதரதுண்டு .

சமீபத்தில் , அறை நண்பர் எனது   "வாழ்க நற்றமிழ் !!! வாழிய செந்தமிழ் நாடு !!! ", என்ற பதிவை படிச்சிட்டு , பத்திரிகையில வர்ற செய்தியெல்லாம் படிச்சிட்டு அதிலிருந்து வாக்கியங்களா எடுத்து போட்டு , பதிவா எழுதீட்டீங்களா ? என்று விளையாட்டாக கேட்டார். 

அந்த நிமிசமே மனசுக்குள்ள , நான் ஏன் பதிவு எழுத வந்தேன் என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது . யாரையும் impress பண்ணவோ , பிரபல பதிவர் ஆகவேண்டும் என்றோ நான் எழுதவில்லை .

என் மனசுக்குள் எழும் ஆதங்களுக்கும் , கேள்விகளுக்கும் வடிகாலாகவும் ..
சமுதாயத்தில் , அரசியலில் மக்களுக்கு எதிராக எதாவது தீங்கு நடக்கும் போது , அதை நேரடியா எதிர்க்க திராணி இல்லா விட்டாலும் , என்னோட எதிர்ப்பையும் , கருத்துகளையும் அழுத்தமா வெளிப்படுத்த , என்னுடைய பதிவுகள் என்னோட நிலைக்கண்ணாடியா இருக்கு .

அதுவுமில்லாம , பள்ளியில் படிக்கும் போது , தமிழ்ல்ல எழுதி பழகினது , அதற்க்கப்புறம் பல வருடங்களாக , என் தமிழுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லாதிருந்தது .
தமிழுக்கும் எனக்குமான தொடர்பாகவே , என் பதிவுகள் இருப்பதால் எனக்கு மிக்க மகிழ்ச்சியே ..

மற்றபடி , விமர்சனங்கள் அனைத்தும் வரவேற்க்கபடுகின்றன . எதிர்மறை கருத்துகளும் என்னை நெறிப்படுத்தவே உதவும் என்பதால் .....,

போற்றுவார் போற்றட்டும் , தூற்றுவார் தூற்றட்டும் !!!   

நட்பின் பெருமை !!!


நட்பு - இ-மெயிலில் ரசித்தவை 




Wednesday, January 19, 2011

சிட்டு குருவிகள் , காணாமல் போன கதை !!!


வணக்கம் மானுட நண்பர்களே !!!

என் பெயர் சிட்டு குருவி ...


( பி .கு சிட்டுக் குருவிகள் , எங்கும் கிடைக்கததால் கிளியின் படங்கள் :) )

காடுகளிலும் , கழனிகளிலும் , கரன்ட் கம்பங்களிலும் 
                 என்னை நீங்கள் பார்த்திருப்பீர்கள் !!!

காக்கை , குருவி எங்கள் ஜாதி - என்று 
                 எமைப் பற்றி உவகையாய்  பாடியுள்ளான் , புரட்சிக்கவி !!!

" சிட்டு குருவி முத்தம் கொடுத்து ..." - என்று 
                 எனைப்பற்றி பாடி அன்பு வளர்த்தார்கள் !!!

"ஏய் குருவி , சிட்டுக்குருவி ...."  - என்று
                  நடிகர் திலகமும் கூவி மகிழ்ந்தார் .

இப்படி ஏற்றமும் , போற்றமுமாக சுதந்திரமாய் ,
                 சிறகடித்து வானில் பறந்திருந்தேன் !!!

பொல்லாத மானிடர் பலர் , நித்தமும் 
                (வெட்டி ) பொல்லாப்புக் கதைகள் பேச 


ஊரெல்லாம் வெட்டி எறிந்தார்கள் மரங்களை !!!
மனிதப் பதர்கள் , நட்டார்கள் செல்போன் டவர்களை !!!

அழித்தேவிட்டனர், வேரோடு எங்களை !!!

BLUE CROSS புதல்வர்களே !!!
         என் இனத்தை , எனக்கு கண்டுபிடித்து தாருங்களேன் , ப்ளீஸ் ?!!!




Tuesday, January 11, 2011

தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!!


அனைவருக்கும் இனிய பொங்கல் (தமிழ்  புத்தாண்டு ?) நல் வாழ்த்துக்கள் .



பொங்கல் - தமிழ் புத்தாண்டா? இந்த அரசியல்வாதிகள் , மக்களை ரொம்பவே குழப்பிட்டாங்க .. எது புத்தாண்டு? எப்படி வாழ்த்து சொல்றதுன்னே தெரியல.. 

எல்லாருக்கும் பொதுவா , தமிழர் திருநாள் ( உழவர் ) வாழ்த்துக்கள் .
அலுவலக நண்பர் ( தமிழர் தான் ) பொங்கலுக்காக , சொந்த ஊருக்கு செல்கையில், "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் " என்று சொன்னேன்..
அவரோ புருவம் உயர்த்தி , " என்ன tamil ல wish பண்றீங்க? " என்று அதிர்ச்சியாக கேட்கிறார் ... 

தமிழர் திருநாளுக்கு, தமிழில் வாழ்த்து சொல்வது கூட ஆச்சர்யமாகிவிட்டது .