Wednesday, March 30, 2011

ஆடாத ஆட்டமெல்லாம் !!!ஆடாத ஆட்டமெல்லாம்,
போட்டவங்க மண்ணுக்குள்ள ,
போன கதை உனக்கு தெரியுமா?

 
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மை என்ன, உனக்கு புரியுமா?

வாழ்க்கை இங்கே யாருக்கும் 
சொந்தமில்லையே,
வந்தவனும் வருபவனும் 
நிலைப்பதில்லையே,


நீயும் நானும் நூறு வருஷம் இருப்பதில்லை, பாரு


நித்தம் கோடி சுகங்கள் தேடி, கண்கள் மூடி அலைகின்றோம், பாவங்களை மேலும் மேலும், சேர்த்துக்கொண்டே போகின்றோம், மனிதன் என்னும் வேடம் போட்டு, மிருகமாக வாழ்கின்றோம், தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து, தீமைகளை செய்கின்றோம் ,
  
பேருக்காக ஒரு ஆட்டம்,
காசுக்காக பல ஆட்டம்,
எட்டு காலில் போகும்போது,
ஊரு போடும் ஆட்டமேகாலம் மீண்டும் திரும்பாதே,
பாதை மாறி போகாதே 

பூமி கொஞ்சம் குலுங்கினாலே,
நின்று போகும் ஆட்டமே !!! 

Sunday, February 13, 2011

ஸ்பெக்ட்ரம் ராஜாவின் முகபுத்தகம் - மின்னஞ்சலில் ரசித்தவைஇன்று என் மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் அனுப்பிய புகைப்படம் இது !!!

மு.கு : இது யார் மனதையும் புண்படுத்துவதர்க்கல்ல   

( ஏன் பின் குறிப்பு மட்டும் தான் இட வேண்டுமா என்ன ? )

( Click on the photo to view better )

"பூபாளம்" பிரகதீஸ்வரன் - நன்றி ஆனந்த விகடன்முன்பெல்லாம் பள்ளிக்கூடம் மெயின் ரோட்டில் இருக்கும் , சாராயக்கடை 
சந்து பொந்துகளில் இருக்கும் .

இப்போது சாராயக்கடை , மெயின் ரோட்டிலும் ...
பள்ளிகூடங்கள் சந்து பொந்துகளிலும் இருக்கின்றன .

அந்தப் பள்ளிகூடத்தை நடத்துவதும் அதே சாராயக்கடை முதலாளி தான்.
பள்ளியில் படித்து விட்டு வேலைக்கு போனால் .
சாராயக் கடையில் தான் வேலை கொடுக்கிறார்கள்.  

ஒரு லிட்டர் சாராயம் தயாரிக்க 30 லிட்டர் தண்ணீர் தேவை.
தமிழ் நாட்டில் எப்படியும் ஒரு வருசத்துக்கு 1 லட்சம் (1.76 லட்சம் அல்ல ?! )
லிட்டர் சாராயம் விற்கும். 

இதைத் தயாரிக்க குறைந்தது 14 டி.எம் .சி தண்ணீராவது வேண்டும் .
இவ்வளவு தண்ணீரை வைகை ஆற்றில் விட்டால், 
ராமநாதபுரம் பக்கம் மூணு போகம் விளையுமே .

( அது சரி ராமநாதபுரம் என்ன , கோபாலபுரம் பக்கத்திலா இருக்கிறது ? )

ஆனா நம்ம ஆளுங்க , அவ்வளவு சாராயத்தையும் குடிச்சுட்டு ,
ஒன்னுக்கு அடிச்சிட்டு வந்துடறாங்க.

அந்த ஒன்னுக்கு அடிக்க கூட மூணு ரூபா கேட்கறான் ?

(கலைஞரின் பொன்னாட்சியில் அரிசி கூட ஒரு ரூபா தான் , ஆனா ஒன்னுக்கு அடிக்க 
மூணு ரூபா .....   என்ன கொடும சார் இது ?!  :) 

யாருப்பா அது , கழகத்தின் தேர்தல் அறிக்கையில ( அதாவது இலவசங்கள் list ல இதையும் சேர்த்துடுங்க ---- உ.பி க்கள் கவனிக்க 
)-- "பூபாளம்" பிரகதீஸ்வரன்
     நாடகக் கலைஞர் .

    நன்றி ஆனந்த விகடன் 

Friday, January 28, 2011

இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப்போராட்டம் !!!
நாட்டுப் பற்றுள்ள அனைத்து தமிழருக்கும் (இந்தியருக்கும்) , 
என்னுடைய பணிவான வேண்டுகோள் .

போபர்ஸ், ஹவாலா, ஸ்பெக்டரம, காமன்வெல்த் போட்டி ஊழல்,  ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் , சுடுகாட்டு கூரை ஊழல் , மாட்டுத் தீவன ஊழல்,  22.5 லட்சம் கோடி சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கல் ( எத்தனை சைபர் என்று சத்தியமா தெரியல ..) 
    
போதும் டா சாமி , அரசியல்வாதிகளை நம்பி நம்பி 
கட்டியிருக்கும் கோவணம் கூட மிஞ்சாது போல ..

பொறுமைசாலி இந்தியர்களே , இத்தனை ஊழல்களுக்கும , 
நீங்கள் மௌனம் சாதித்து , மங்குணிகளாக இருந்தது போதும் .


நமது  தாய் நாட்டை , ஊழலில் திளைத்த அரசியல்வாதிகளிடமிருந்து 
மீட்டு எடுக்கவேண்டியது நமது கடமை .


மக்கள் அனைவரும் ஊழலுக்கு எதிராக ஒன்றிணைவோம் .
காசுக்கு ஒட்டு வேண்டவே வேண்டாம் ..

லஞ்சம் கொடுக்க வேண்டாம் , லஞ்சம் வாங்கவும் வேண்டாம் .
சுய மரியாதையுடன் , நெஞ்சு நிமிர்த்தி வாழ்வோம் .

ஊழலுக்கு எதிரான இரண்டாவது சுதந்திர வேள்வி செய்வோம் .
ஜாக்கிரதை , காந்தி போல , வீரபாண்டிய கட்டபொம்மனைப் போல 
முமமூடியிட்டு  இன்று கோட்சேக்களும் , எட்டப்பன்களுமே நிறைந்திருக்கிறார்கள். 

தன்மானமுள்ள, இந்தியர்கள் யாவரும் 
ஜாதி , மத , இன , மொழி அனைத்து வேலிகளையும் தாண்டி ஒன்றுபடுவோம் .ஊழலுக்கு எதிரான மாபெரும் மனித சங்கிலி போராட்டம் !!!

வழிநடத்துபவர்கள் : http://www.indiaagainstcorruption.org/   அமைப்பினர் .

இடம் : காந்தி சிலை , மெரினா கடற்கரை , சென்னை .
நாள் : 30 ஜனவரி , 2011. ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9:00 முதல் 11:00 வரை .

மேலும் விவரங்களுக்கு :
http://www.facebook.com/event.php?eid=137372249656901&ref=mf

நமது வருங்கால சந்ததியினருக்காக , ஊழலற்ற இந்தியாவை விட்டுச்செல்லுவோம் ,
அனைவரும் வாருங்கள் !!!
Saturday, January 22, 2011

மேனேஜரிடம் கேட்க விரும்பும் கேள்விகள்....


1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க... ஆனா சாயந்திரம் 6 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது...? 

 
2.  
அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சப்படாம சொல்லிட்டு போக முடியுது..? 
3. 
 
நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicated னு சொல்றீங்க... ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumb  னு சொல்றீங்க..? 


4. உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலைனா,அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க... அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க..? 

5. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க...? 

6. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on work னு சொல்றீங்க...? 

7. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க...? 

8. சாயந்திரம் 6 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க...? 

ஏன் சார் ஏன்....


( அது ஒன்னும் இல்லீங்க , ஆபிஸ்ல மேனேஜர் கூட லடாய்
 அதுதான் இப்படி ....)

Friday, January 21, 2011

(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code) திறந்துவைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல  
அதையே பார்த்துக் கொண்டிருங்கள்.
பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

 2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும்அவ்வப்போது 
 பற்களைக் கடித்துக் கொள்ளவும்ஏதாவதுரெண்டு வார்த்தை
  டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.

3. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும்.
 கூடவே நகத்தையும் கடித்துவையுங்கள்.


4. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில  
நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்துடைப் அடிக்கவும்.

5. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள்.
 நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள் 
கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்துசிரித்தபடியே 
 "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்என்றோ சொல்லுங்கள்.

6. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள் 
ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள்  
என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

7. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு  
நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் திறந்தேவையுங்கள் 
அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும்நம்பர்களையும்  
கிறுக்கிக் கொண்டிருங்கள்.


8. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை  
எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் முக்கியமானமீட்டிங்குக்கோ 
விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.

9. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய் 
ஹலோவுக்கு பதில் சொல்லாமல்கடந்து செல்லுங்கள்,
 பிறகு பிஸியாக இருந்தேன்ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.

                                                   
10. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால்  
(உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்உங்கள்  
டீம்மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள்.  
போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம்போட்டு விட்டு வாருங்கள்.