Friday, December 24, 2010

வாழ்க நற்றமிழ் !!! வாழிய செந்தமிழ் நாடு !!!


உலக தமிழர்களின் தலைவர் என்று ஒருவர் இருக்கிறார் ...


பழங்காலமாய் 'தமிழ்' பேசியே தமிழ் மக்களை மடையர்கள் ஆக்கிகொண்டிருக்கும் , சித்து வேலைகள் நன்று தெரிந்தவர் இவர் ...









ஈழத்தின் கூக்குரல்கள் இவருக்கு எப்பவும் 'தூரத்து இடி முழக்கம்' தான். 

மெரீனாவில் உண்ணாவிரத நாடகமும், நடுவண் அரசுக்கு சளைக்காமல் 'பதில் வாரா' கடிதங்களும் மட்டுமே அனுப்பிக் கொண்டிருப்பார்..

ஈழத்தின் ஓலம் இருக்கட்டும், சிங்கள அரசின் துப்பாக்கிகளுக்கு நித்தமும் இரையாகும் , எம் தாய் தமிழக  'மீனவர்களின்'     கூக்குரல்கள் கூடவா இவருக்கு கேட்காது ?

ஆம் எப்படி கேட்கும் ? மந்திரி சபையை பங்கு போட, தலைநகர் வரை சென்று பந்தி அமர்ந்து வரவும், 

லட்சம் கோடி ஊழல்களில் தமக்கு பங்கே இல்லை என்ற "நமத்து" போன பேட்டிகள் கொடுக்கவும்,    

பாராட்டு விழாக்கள்  பலவும் கண்டு களைத்துப்போய் இருப்பார். 

தலைவருக்கு  மிஞ்சிய 'தனயன்கள்' தமிழகத்தை கூறு போட்டு , குடும்பமே சொந்தம் கொண்டாடி வருகிறது ... 

திருமங்கலம் பார்முலா இருக்கும் வரை எங்களை அசைக்க முடியாது என மார் தட்டுகின்றனர்  ..

இடித்துரைக்க வேண்டிய எதிர்க்கூடாரமோ  'கொட நாட்டிலேயே' தூங்கிக் கொண்டிருக்கிறது .

தட்டிக் கேட்கவேண்டிய ஊடகங்களோ , போட்டி போட்டுக் கொண்டு ஆளும்கட்சி 'ஜால்ரா'  போட்டுக் கொண்டிருக்கிறது ...

அரசியல் கட்சிகள் அனைத்தும்  , எஞ்சியதை பிய்துண்பதற்காக "தேர்தல்" திருவிழாவை எதிர் நோக்கி காத்திருக்கின்றன ...

 தமிழன் பாவம்.... யாரைத்தான் நம்புவான் ? என்ன தான் செய்வான்? 


  • இலவச தொலைகாட்சி, 
  • இலவச சமையல் எரிவாயு, 
  • இலவச மின்சாரம், 
  • கடன்கள் தள்ளுபடி , 
  • வேலை இல்லாமல் இருப்பதற்கே ஊக்கதொகை (?!) 


என இலவசங்களிலேயே வாழ்வதால் , நீண்ட காலமாய் உழைப்பையே மறந்து விட்டான் .     

எது எப்படி இருந்தால் நமக்கு என்ன? 

மன்மதன் அம்பு ' எப்போ ரிலீஸ் ஆகும்?  
எந்திரன்   கலக்சன் எவ்வளவு? 

என்று  கதைகள் பேசி ....

டீலா நோ டீலா ? நீயா நானா ? பார்த்து விட்டு தூங்கி இருப்பதே சுகம் ...

வாழ்க நற்றமிழ் !!!   வாழிய செந்தமிழ் நாடு !!!

(கருத்து பிழைகளை , மன்னிக்கவும் ... )

கவிஞர் வாலியின் அமரத்துவம்


சில நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில்  ஒரு நிகழ்ச்சியில், கவிஞர் வாலி அவர்களின் பாடல்களை பற்றி சிலாகித்து கொண்டிருந்தனர். அவற்றில் ஒரு பாடல் என் மனதில் ரீங்கரித்து கொண்டே இருக்கின்றது ..


 


உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது , 
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது .....
காதல் தோற்றதாய் கதைகள் இங்கு ஏது ?
தோற்றால் தோற்றது காதல் ஆகாது .... 
எல்லாமே சந்தர்ப்பம் கற்பிக்கும் தப்பர்த்தம்....



அற்புதமான வரிகள்...   காதலர்கள் தோற்கலாம் , காதல் தோற்பதில்லை .