Saturday, December 8, 2018

ஏழைகளின் ஊட்டி - எழில்மிகு ஏலகிரி !!! My Travelogue | Bangalore to Yelagiri

ஏழைகளின் ஊட்டி - எழில்மிகு ஏலகிரி 



ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு ஒரு நாள் பயணமாக, பெங்களூரில்  இருந்து சென்றோம். 
ஊட்டி,கொடைக்கானல்,ஏற்காடு போல பிரபலமான மலைத்தலம் இல்லையென்றாலும், பெங்களூரு மற்றும் சென்னைக்கும் மிக அருகில் அருமையான,அமைகியான ஒரு சுற்றுலாத்தலம் ஏலகிரி. ஏலகிரி 14 மலை கிராமங்கள் கொண்ட 30 கிமீ சுற்றளவு கொண்ட சிறிய அழகான ஊர்.


Youtube Video: https://youtu.be/dUn-R3uxbmk

Bengaluru to Yelagiri | எழில்மிகு ஏலகிரி !! | Travelogue | Dec 2018





ஏலகிரி செல்லும் வழி :
வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏலகிரி மலை , பெங்களூரில் இருந்து சுமார் 160 கிமீ தொலைவில் உள்ளது. 

பெங்களூரு - ஓசூர் - கிருஷ்ணகிரி - வாணியம்பாடி டோல் கேட் - திருப்பத்தூர் சாலை - பொன்னேரி கிராமம் - ஏலகிரி மலை பாதை. மலை அடிவாரத்திலிருந்து 14 கிமீ மேலே அமைந்துள்ளது. 



14 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை , அழகாக , சற்று குறுகலாக உள்ளது. ஒவ்வொரு கொண்டை ஊசி விளைவுகளுக்கும் திருவள்ளுவர், ஒவ்வையார், கம்பன், கபிலன், பாரி , ஓரி , காரி , ஆய் , அதியமான் என தமிழ் புலவர்கள் மற்றும் மன்னர்கள் பெயர் வைத்துள்ளது மிக அருமை.

புங்கனூர் ஏரி / பூங்கா :

ஏலகிரி மலையின் இதயம் போல் அமைந்துள்ளது புங்கனூர் ஏரி . அழகான இந்த ஏரியை சுற்றிலும் மலை முகடுகள். ஏரியின் அழகை ரசிக்க , சுற்றுலா துறை சார்பாக படகுகள் குழாம் அமைந்துள்ளது. துடுப்பு படகு, மற்றும் பெடல் செய்யக்கூடிய படகுகள் என நம் விருப்பத்திற்கு ஏற்ப படகில் பயணம் செல்லலாம். புங்கனுர் பூங்கா சிறுவர்கள் விளையாடி மகிழ நிறைய விளையாட்டுகள் உள்ளன.













ஏரிக்கு செல்லும் வழியெங்கும் மலை வாழைப்பழங்கள் , ராமர் சீதா பழம் , மனோரஞ்சித பழம் , ஏலகிரி நெல்லிக்கனி , Home Made Chocolates, மற்றும் மீன் உணவுகளும் கிடைக்கும் . 


மூலிகை  :

ஏரிக்கு செல்லும் வழியிலேயே மூலிகை பண்ணை அமைந்துள்ளது. இங்கு நிறைய மூலிகை செடிகள் வளர்த்து விற்பனையும் செய்கிறார்கள்.






இயற்கை பூங்கா :

புங்கனூர் ஏரிக்கு எதிரிலேயே இயற்கை பூங்கா அமைந்திருக்கிறது. இங்கு பல வண்ண பூக்கள் , செடி மரங்கள், சிறுவர் விளையாட்டு திடல், செயற்கை நீரூற்று ஆகியவை உள்ளது. அதுமட்டும் அல்லாமல், இங்கு அமைந்துள்ள செயற்கை அருவி அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.









முருகன் கோவில்  :

மங்களம் எனும் மலை கிராமத்திற்கு அருகே ஒரு மலை சிகரத்தின் மேல் அமைந்துள்ள முருகன் கோயில் ரொம்ப அருமையான , அழகான இடம். மனதிற்கு அமைதியையும் , சுற்றியுள்ள அனைத்து மலை சிகரங்களையும் பார்த்து ரசிக்க சிறந்த இடம்.






Fundera பார்க் :

ஏராளமான கிளிகள்,பறவைகள் ஒருங்கே காணக்கிடைக்கும். இங்கு உள்ள ostrich நெருப்பு கோழிகள் அனைவரையும் கவரும். பறவை பிரியர்களுக்கு சிறந்த இடம்.
   
















எங்கள் பயணம் ஒரு நாள் மட்டுமே என்பதால் ஏலகிரியை முழுமையாய் சுற்றி பார்க்க முடியவில்லை. ஏராளமான  Adventure ரிசார்டுகள் அமைந்துள்ளன. ட்ரெக்கிங் மற்றும் paragliding  இங்கு மிக பிரசித்தம். மலைகளின் மற்றொருபுறம் அமைந்துள்ள ஜலகம்பாறை அருவியும் பார்க்க வேண்டிய இடங்கள். மறுமுறை செல்லும் போது  தவறாமல் இவற்றையும் பார்க்கவேண்டும் என நினைத்திருக்கிறேன்.

   






  

No comments:

Post a Comment